Posts

வாசிப்பனுபவம் - பட்டாம்பூச்சி புத்தகம்

Image
#புத்தக_வாசிப்பனுபவம்... #பட்டாம்பூச்சி - #ஹென்றி_ஷாரியர் படிக்கின்ற ஒவ்வொரு புத்தகமும் நமக்கு ஓர் ஆசான் போன்றது... அதாவது ஒவ்வொரு நல்ல புத்தகமும் நமக்கு ஏதோ ஒன்றை மண்டையில் சுத்தியல் கொண்டடித்தாற் போல சொல்லிக் கொடுக்கத்தான் செய்கின்றன... இந்த புத்தகம் எனக்கு வாழ்க்கையில் போராட கற்றுக் கொடுத்தது... அதாவது வாழ்வில் எத்தனை முறை வீழ்ந்தாலும் வீழ்ந்த உடனேயே எழுந்து நின்று போராட கற்றுக் கொடுத்தது... இது ஒரு பிரெஞ்சு ஆயுள் தண்டனை சிறைக் கைதி ஹென்ரி ஷாரியர் (பட்டாம் பூச்சி) எழுதிய 854 பக்கங்களை கொண்ட சுய வரலாற்று புத்தகம்... சுதந்திரமாக பறக்க இயற்கை கொடுத்த இறக்கைளில் தன் 25ம் வயதில் செய்யாத குற்றத்திற்காக விலங்கிட்டு சிறையில் அடைக்கப்பட்டு தப்பிக்க முயல்வதும் மீண்டும் மீண்டும் மாட்டிக்கொண்டு மனித தன்மை அறவே அற்று போன சிறைகளில் அடைக்கப்பட்டும் மீண்டும் மீண்டும் தப்பிக்கும் முயற்சியில் 13 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெறுவதே இந்நாவல்... படிக்கும் நம் மனதை எழுச்சிக் கொள்ளத்தக்க தருணங்கள் பல உள்ளன இந்நூலில்... கதை மாந்தர்கள் வழியில் உண்மையான நட்பு, மனிதநேயம், காதல், கடற்பயணங்கள் என ப...
மூன்றாம் உலக போர் - வைரமுத்து கடைசியாக நான் படித்த புத்தகங்களில் கொஞ்சம் பெரியது... காதலையும் விவசாயத்தையும் நன்கு ஆராய்ந்து அணு அணுவாய் பிரித்து அதன் அத்தனை கூறுகளையும் நமக்கு எடுத்தூட்டுவதில் தனக்கு நிகர் தானாக திகழும் வைரமுத்துவின் விவசாயம் குறித்த மற்றுமொரு தவிர்க்க முடியாத சகாப்தம்.... புவி வெப்பமயமாதலும், உலகமயமாதலும் தனியார்மயமாதலும் தாராளமயமாதலும் சேர்ந்து வேளாண்மையின் அத்தனை கூறுகளின் மீதும் தொடுத்திருக்கும் போர் தான் இந்த *மூன்றாம் உலகப் போர்*.... இயல்பில் விவசாய நாடான இந்தியாவில் ஒரு சாதாரண கிராமத்தில் *ஏழ்மையில் செல்வந்தராக* வாழும் ஒரு சாதாரண விவசாயி கருத்தமாயின் கதை... கருத்தமாயிக்கு ரெண்டு தலைமுறையா கழியாத கடன், ஒரு தலைமுறையா பேச்சுவார்த்தை இல்லாத மனைவி, பாசத்தை காட்டி வளர்த்தாலும் நெஞ்சில் ஆலகால விஷத்தை கொண்ட மூத்த மகன், பிறந்த கிராமத்தை முன்னுதாரணமாக மாற்றி மீண்டும் கிராம விவசாயத்திற்கு புத்துணர்வூட்டிய இளைய மகன், கண்ணுக்கு கூட மழைய காட்டாத மேகம், கஞ்சிக்கு கூட விளையாத மண்... இந்த மண்ணை ஒட்டுமொத்தமாக மலடாக்க நினைக்கும் தற்கால மனிதனின் ஒட்டுமொத்த உருவத்தின்...
Image
வாழ்க்கையில் எதை எதையோ தேடிவிட்டு.... தேடியவைகளில் எது கிடைத்தது என்று ஆராயாமலும்... கிடைத்தவைகளில் எது தேடியவை என்றும் ஆராயாமல்... கிடைத்தவை தான் தேடியவை என்ற சமாதான முடிவுக்கு வந்துவிடுகிறது நமது மனம்....
Image
என் கையிலிருந்து சிந்தி சிதறிய இந்த நிர்வாண நெல்மணிகள் வீணாக்கப்பட்டவை அல்ல... அவைகளில் சில எறும்புகளின் பெயர்களும் சில குருவிகளின் பெயர்களும் எழுதப்பட்டு இருக்கலாம்... #உயிர்களை_நேசிப்போம்... ~UV
Image
நேற்று பேருந்து பயணத்தில்... நல்ல மழை பெய்தாலும் அரசு பேருந்தின் மூடமுடியாத ஜன்னல் கதவு கொண்ட ஜன்னலோர இருக்கை.... ஆனால் என்னை தவிர யாரும் நனைய வாய்ப்பில்லை... பக்கத்துல ஒரு பாட்டி... வயசு எப்படியும் நாலு ராஜ் வயசு இருக்கும் போல...அதாவது 90-95 வயசு இருக்கும்...இந்த வயசுல தனியா பஸ்ல...அதுவும் ஒரு கைல தடி, மறு கைல ஒரு மூட்டை...பார்வை மட்டும் இப்பவோ அப்பவோனு விருப்பமில்லாமல் பாட்டியிடம் ஒட்டிகிட்டு இருந்தது... கொஞ்ச நேரத்தில பாட்டி பக்கத்துல ஒரு ராஜ் வயசுல்ல பொண்ணு உட்கார்ந்தாங்க.... பாட்டி கொஞ்சம் வசதியா உட்கார்ந்து கொண்டதால் நான் நல்லா நனைஞ்சிட்டேன்...அதுவும் நல்லாதான் இருந்ததுனு மழைய வேடிக்கை பார்த்துகிட்டே வந்தேன்... அப்ப நடத்துனர் வந்து பாட்டிகிட்ட டிக்கெட் எடுக்க சொன்னாரு... காது மட்டும் நல்லா கேட்கும் போல... பாட்டி டக்குனு தன்னோட சுருக்கு பையின் அடி ஆழத்தில இருந்த ஒரு ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து கை நடுக்கத்தின் காரணமாக செல்ல மறுத்த பணத்தை ஒரு வழியா அவரிடம் சேர்த்தது... அவர் பாட்டிமா இன்னும் 20₹ தாங்கனு சொன்னதும் அவர் என்ன மொழியில் பேசுகிறார் என யோசிப்பதை போல அவரைய...