வாசிப்பனுபவம் - பட்டாம்பூச்சி புத்தகம்
#புத்தக_வாசிப்பனுபவம்... #பட்டாம்பூச்சி - #ஹென்றி_ஷாரியர் படிக்கின்ற ஒவ்வொரு புத்தகமும் நமக்கு ஓர் ஆசான் போன்றது... அதாவது ஒவ்வொரு நல்ல புத்தகமும் நமக்கு ஏதோ ஒன்றை மண்டையில் சுத்தியல் கொண்டடித்தாற் போல சொல்லிக் கொடுக்கத்தான் செய்கின்றன... இந்த புத்தகம் எனக்கு வாழ்க்கையில் போராட கற்றுக் கொடுத்தது... அதாவது வாழ்வில் எத்தனை முறை வீழ்ந்தாலும் வீழ்ந்த உடனேயே எழுந்து நின்று போராட கற்றுக் கொடுத்தது... இது ஒரு பிரெஞ்சு ஆயுள் தண்டனை சிறைக் கைதி ஹென்ரி ஷாரியர் (பட்டாம் பூச்சி) எழுதிய 854 பக்கங்களை கொண்ட சுய வரலாற்று புத்தகம்... சுதந்திரமாக பறக்க இயற்கை கொடுத்த இறக்கைளில் தன் 25ம் வயதில் செய்யாத குற்றத்திற்காக விலங்கிட்டு சிறையில் அடைக்கப்பட்டு தப்பிக்க முயல்வதும் மீண்டும் மீண்டும் மாட்டிக்கொண்டு மனித தன்மை அறவே அற்று போன சிறைகளில் அடைக்கப்பட்டும் மீண்டும் மீண்டும் தப்பிக்கும் முயற்சியில் 13 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெறுவதே இந்நாவல்... படிக்கும் நம் மனதை எழுச்சிக் கொள்ளத்தக்க தருணங்கள் பல உள்ளன இந்நூலில்... கதை மாந்தர்கள் வழியில் உண்மையான நட்பு, மனிதநேயம், காதல், கடற்பயணங்கள் என ப...